தமிழக தேர்தல் களம்..மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி..!!

தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. முற்பகல் 11 மணி வரையில் 136 இடங்களை திமுகவும், 96 இடங்களை அதிமுக கட்சியும் பெற்றுள்ளன.

இந்த தேர்தல் முடிவுகளின் போது நாம் தமிழர் கட்சி மிகப் பெரிய கேம் சேஞ்சராக மாற வாய்ப்பிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியே அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.இன்று காலை முதல் தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன் படி முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.இந்த தேர்தலில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என்று கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. அதே போன்று நாம் தமிழர் கட்சி முதல் சுற்றின் முடிவின் பல்லடம் மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்து முன்னேறி வருகிறது.சீமான் தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் பின்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.