யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பெண் கடந்த 11ம் திகதி முழங்காவில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டவர் எனவும், அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று கடந்த 13ம் திகதி உறுதிப்படுத்தபட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எவ்வாறாயினும், ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
