கொரோனாவின் மத்தியில் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைந்த குடும்பம்.!! தேடிப் பிடித்து தனிமைப்படுத்திய காவல்துறை!!

இந்தியாவில் இருந்து மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேச வீடொன்றில் பதுங்கியிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரின் இரண்டு பிள்ளைகளுடன் சுகாதார பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்தப் பெண்ணுடன் இந்தியாவில் இருந்து வந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.இந்தியாவின் சென்னை குப்பம் பகுதியில் இருந்து குறித்த பெண் மீன்பிடிப் படகு மூலம் நேற்று முன்தினம் (30) அதிகாலை வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்துள்ளார்.34 வயதான தாயும், 13 மற்றும் 4 வயதான பிள்ளைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தலைமன்னாருக்கு வந்து, அங்கிருந்து மன்னாருக்கு சென்று, பேருந்தில் புத்தளம் பயணித்துள்ளனர்.
அவர் முச்சக்கர வண்டியொன்றிலும், கொழும்பு செல்லும் பேருந்திலும் பயணித்துள்ளார். 30ஆம் திகதி இரவு பேருந்தில் கொழும்பிற்கும் பயணித்து திரும்பியுள்ளார்.இது தொடர்பில் தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவின் அதிகாரிகள் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் அவர் பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.அவருடன் தலைமன்னாருக்கு வந்த மற்றைய பெண் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.