நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறை மேலும் ஒரு வாரகாலம் நீடிக்கப்படுவதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.


நாளை மறுதினம் திங்கள் கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒரு வாரகாலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது.இதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி பாடசாலைகளை மீளத் தொடங்குவதா என்பது தொடர்பில் 07 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.