இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதிக பாதிப்படைந்த பகுதிகள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை, மாத்தளை, நாவுல, கலெவேல ஆகிய பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை குருணாகல் மாவட்டத்தின், பன்னல பொலிஸ் பிரிவு, கல்லமுன, உடுபத்தாவ கிராம சேவகர் பிரிவுகள் ஆகியனவும் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், மொனராகலை மாவட்டத்திலுள்ள சியம்பலாண்டுவ பொலிஸ் அதிகார பிரிவு மற்றும் எலமுல்ல கிராம சேவகர் பிரிவு ஆகியனவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.