முகக்கவசம் அணியாமல் கிளிநொச்சி வீதிகளில் நடமாடுபவர்களை திருப்பியனுப்பும் இராணுவம்..!!

கிளிநொச்சி பிரதான வீதிகளில் பெருமளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகருக்கு வருகின்ற பொது மக்கள் முக கவசம் அணியாமலும், கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு மாறாகவும் வருகின்றவர்களை வழி மறித்து, அவர்களை மீண்டு திருப்பி அனுப்பும் செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.கிளிநொச்சி பெரும்பாலான வீதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு, பொது மக்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு வருகிறது.இதன் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு விளக்கமளிக்கப்படுவதோடு,எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.