அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டமையினால் யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் ஆலயமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலய திருவிழா சில தினங்களின் முன்னர் நடைபெற்றது. இதில் சுகாதார விதிமுறைகளை மீறி நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.ஏற்கனவே, வண்ணார்பண்ணை சிறி காமாட்சியம்பாள் ஆலயத்தில் ஏராளமாக பக்தர்கள் குவிந்து, ஆலய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும்,கோண்டாவிலில் ஏராளமானவர்கள் குவிந்தனர்.(கோப்பு படம்)
இதையடுத்து, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியினால் ஆலயம் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். பலர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.