புகையிரதப் பயணிகளுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு..சேவைகள் இடைநிறுத்தப்படும் ரயில் சேவைகள்..!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமைடைந்துவரும் நிலையில் தூரப் பிரதேசங்களுக்கான கடுகதி ரயில் சேவைகள் நாளைமறுதினம் சனிக்கிழமை முதல் மறு அறிவிப்புவரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி, பொலன்னறுவை, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகிய இடங்களுக்கான கடுகதி ரயில் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளன.கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து நெடுந்தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சேவையிலுள்ள அலுவலக ரயில் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும், அலுவலக ரயில்கள் வழமைப்போன்று சேவையில் இருந்தாலும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.