முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பயணிகளை ஏற்றிச் சென்ற 1200 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 6,110 முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது அவற்றில் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.