இலங்கையில் இன்றும் 1077 பேருக்கு தொற்று!

இலங்கையில் 3ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் 1000ஐ கடந்திருக்கின்றனர். அதற்கமைய 1077 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


இந்நிலையில் நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 106,030ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.