யாழ்.மாதகல் கடற்பரப்பில் கடற்படையினர் திடீர் அதிரடி!! 240 கிலோ கஞ்சா பொதிகள் மீட்பு!!

யாழ்.மாதகல் கடற்பரப்பில் சுமார் 240 கிலோ கஞ்சா கடற்படையினால் மீட்கப்பட்டுள்ள நிலையில் கடற்படை விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மாதகல் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஆட்களற்ற படகு ஒன்று நிற்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.குறித்த படகினை சோதனையிட்டபோது கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.