இலங்கையில் முகக் கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் 19 பேருக்கு கோவிட் தொற்று!!

கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக முகக் கவசம் தயாரிக்கும் மினுவங்கொட, யட்டியனவில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 19 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.மினுவங்கொட பொதுச் சுகாதார பரிசோதகர் அருண ரன்தெனிய நேற்று இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்.

அந்த தொழிற்சாலையிச்ல் 40க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்ற நிலையில் ஒரு பெண் ஊழியர் சுகயீனமடைந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து 20 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.ஏனைய 40 பேருக்கு இன்றைய தினம் பரிசோதனை முடிவுகள் கிடைக்கவுள்ளதாக சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.தொழிற்சாலையின் உரிமையளாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியான பின்னர் நாடு முழுவதும் முகக் கவசம் அனுப்பப்படும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.