மர்ம தேசத்தின் தலைவரின் கையெழுத்திற்காக காத்திருக்கும் முக்கிய கோப்புகள்… அதிகாரத்தை மெல்ல மெல்ல தன் கையில் எடுக்கும் தங்கை..!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைப் பற்றி பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவர் பல வாரங்களாக முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடவில்லை என்ற புதிய தகவல் வெளி வந்துள்ளது. மர்மநாடு, அணு ஆயுத சோதனைகளால் மிரட்டி வரும் நாடு என்று பெயர்களை கொண்ட வடகொரியா, தற்போது தங்கள் நாட்டின் அதிபருக்கு என்ன ஆனது என்பது குறித்து தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.ஏனெனில், அவர் இறந்துவிட்டதாக, வடகொரியாவில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதைப் பரப்பியது யார் என்ற தீவிர கண்காணிப்பில் பொலிசார் இறங்கியுள்ளனர்.ஆனால், தென்கொரியா அவர் நலமுடன் இருப்பதாக கூறுகிறது. இருப்பினும் வடகொரியா இதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது.இந்நிலையில் தற்போது, கிம் பல வாரங்களாக, நாட்டின் முக்கிய, அதாவது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்தவிடவில்லை, ஜப்பான் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒப்புதல் மற்றும் கையெழுத்திற்காக கொரியாவின் ஆளும் தொழிலாளர்கள் கமிட்டி ஆவணங்களை அனுப்பியுள்ளது. ஆனால், அது திருப்பி அனுப்பப்படவில்லை என்று ஜப்பானின் ஜெண்டாய் பிசினஸ் குறிப்பிட்டுள்ளது.இது மட்டுமின்றி ஏப்ரல் மாதத்தின் நடுவில் இருந்து, பல மாநிலங்களுக்கு கிம்மின் கையெப்பதுடன் ஆவணங்கள் கிடைக்கவில்லை. இதோடு கிம்மின் ஒப்புதலுக்காக அரசு நிறுவனங்கள், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பல வாரங்கள் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.