யாழில் தீவிரமான கொரோனா பரவல்..அசண்டையீனமாக சுகாதார விதிமுறைகளை மீறும் வழிபாட்டுத் தலங்கள்..விடுக்கப்பபடும் கடும் எச்சரிக்கை..!

யாழ்.மாவட்டத்தில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் எவற்றிலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. என கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன்,மக்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும்
தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தீவிரமான கொரோனா தொற்று இல்லையென்றபோதும், ஆபத்தான நிலை இப்போதும் உள்ளதென மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.தற்போதைய கொரோனா நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.வழிபாட்டு இடங்களில் 50 பேருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.மாவட்டத்தில் வழிபாட்டு இடங்களில் இந்த நடைமுறையினை பொதுமக்கள் அனுசரித்துச் செல்லவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த அலட்சியத்தை, விடுத்து சுகாதார நடை முறைகளை அலட்சியம் செய்யாது பொதுமக்கள் செயற்படவேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த சுகாதார நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.எனவே ஆலயங்களில் 50 பேருக்கு மேல் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இந்த விடயங்களை ஆலய பரிபாலன சபையினர்.மற்றும் ஆலய நிர்வாகத்தினர் கண்காணித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழிபாட்டு இடங்களில் இறுக்கமான நடைமுறையினை பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது எனவும் மாவட்ட செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.