இலங்கையில் தீவிரமாகும் கொரோனா..கேகாலை மாவட்டப் பாடசாலைகளுக்கு பூட்டு..!!

கேகாலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு மேல் மற்றும் வட மேல் மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று அறிவித்தார்.அதேநேரம், தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.