இலங்கையின் பல பகுதிகளிலும் சிறுவர்களைத் தாக்கும் புதியவகை வைரஸ் காய்ச்சல்..!!

நாட்டில் தற்போது சிறுவர்களிடையே புதிய வகை வைரஸ் காய்ச்சலொன்று பரவி வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

டெங்கு காய்ச்சலை ஒத்த நோய் அறிகுறிகளுடன் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நாட்டில் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.டெங்கு நோய் அறிகுறிகளுடன் சிறுவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, அது டெங்கு நோயாக அன்றி வேறு வகை வைரஸ் காய்ச்சலாகவே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.