புதிய வகை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி.?

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இதனால் நோய் அறிகுறி தீவிரமடையும் வரை நோய் தொற்றியுள்ளதா என அறிய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.நோய் நிலைமை தீவிரமடையும் போது சிகிச்சையளிப்பது சிரமம் என்பதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உங்களில் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் இருந்தால், சுயமாக பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்ள முடியும்.நீங்கள் நொடி பொழுதில் இதற்கு முன்னர் ஏறி வந்த இடங்களில் தற்போது ஏறுவதற்கு சோர்வாக உள்ளதா என பார்க்க வேண்டும்.1 – 10 எண்ணும் வரை மூச்சை பிடித்து வைக்க முடிகின்றதா என சோதித்துக்கொள்ள வேண்டும்.மூச்சை பிடித்து 1 – 20 அல்லது 40 வரை எண்ண வேண்டும். அதன் பின்னர் சிறிது தூரம் நடந்து விட்டு மீண்டும் முயற்சித்த வேண்டும். 1 – 10க்கு குறைவான அளவு மாத்திரமே மூச்சை பிடித்திருக்க முடிந்தால் அவதானிக்க வேண்டும்.சில வார்த்தைகளை பேசும் போது சோர்வாக உணர்தல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள், உடனடியாக வைத்தியரை நாடி பரிசோதனை செய்ய வேண்டும் என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.