காற்றின் மூலம் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்..இளையோருக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை..!!

கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கோவிட் -19 வைரஸின் புதிய திரிபு காற்றில் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இளையோர் மத்தியில் இந்த வைரஸ் திரிபு வேகமாக பரவும் எனவும் அவர் கூறியுள்ளார். எமது துரதிஷ்டம் காரணமாக நாட்டுக்குள் புதிய கோவிட் திரிபு பரவியுள்ளது.இந்த புதிய திரிபு ஏற்கனவே இருந்த திரிபுகளை விட வேறு விதமாக செயற்பட கூடியது எனக் கண்டறியப்பட்டுள்ளது.இந்த புதிய வைரஸ் திரிபு மிகவும் மோசமாக பரவி வருவதுடன் இளையோருக்கு நோய் அறிகுறிகள் தென்படுகின்றன.எச்சில் துப்புவதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. காற்றின் மூலம் பரவும்.காற்றில் இந்த வைரஸ் திரிபு சுமார் ஒன்றரை மணி நேரம் வரை இருக்க முடியும்.இதனால் முககவசங்களை அணிவது முக்கியமானது எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.