சற்று முன்னர் யாழில் இடம்பெற்ற கோர விபத்து..!! ஏழு பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.!!

காரைநகரிலிருந்து யாழ் நோக்கில் சென்ற இ போ ச. பஸ் வண்டி இன்று வியாழ க்கிழமை சற்று முன்னர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலில் பாய்ந்து பயங்கர விபத்துக்குள்ளாகியது.

பொன்னாலைப் பாலத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சாரதி நடத்துநர் உட்பட ஏழு பயணிகள் காயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.