இரண்டு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை !

மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.


எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்