கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த 47 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அண்மையில் ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் , இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை குறித்த பெண், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கவில்லையென மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பாணந்துறையினைச் சேர்ந்த எம்.இசற்.எம்.எச்.பாத்துமா சியானா (47 வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணின் அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.