சற்று முன்னர் கிடைத்த செய்தி…கொரோனா தொற்றிலிருந்து மேலும் மூவர் குணமடைவு..!!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் மூவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரை 139 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் இதுவரையில் 649 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.