யாழ்.உரும்பிராயில் இன்று காலை நடந்த கோர விபத்து..10 படையினர் காங்களுடன் மருத்துவமனையில்..!!

யாழ்.பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பலாலி வீதியால் பலாலி நோக்கி பயணித்த இராணுவ வாகனம் ஒன்றும், கோப்பாய் – மருதனார்மடம் வீதியால் மருதனார்மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் உரும்பிராய் சந்தியை கடக்கும்போது விபத்தில் சிக்கியுள்ளன.சம்பவத்தில் டிப்பர் வாகனம் கவிழ்ந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தில் இருந்த 13 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேர் மோசமாக காயமடைந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் இருந்தோர் கூறியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.