கொரோனா அபாயத்தினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் திருமலை கல்வி வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு!!

திருகோணமலை மாவட்ட கல்வி வலயப் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோவிட் நோய்த் தொற்று பரவுகையை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் திருகோணமலை கல்வி வலயப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யம்பத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.