நான்கு மாதக் கர்ப்பம்..கொரோனா நோயாளிகளுக்காக இரவு பகல் பாராது சேவையாற்றும் பெண் செவிலியர்..!! குவியும் வாழ்த்துக்கள்..

இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் மக்கள் அல்லல்படுகின்றனர்.

தினந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.இந்நிலையில், மனிதநேயமிக்க பலரும் தானாக முன்வந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகின்றனர், சமீபத்தில் கூட பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், 5 மாத கர்ப்பிணியாக இருந்த போதும், சாலையில் நின்று மக்களுக்காக பணிபுரிந்து கொண்டிருந்தார்.தற்போதும் அதைப்போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது, சூரத்தின் கொரோனா மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் Nancy Ayeza Mistry, 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.ரமலான் மாத நோன்பையும் கடைபிடித்து மக்களுக்காக சேவையாற்றி வருகிறார், இதுகுறித்து Nancy Ayeza Mistry கூறுகையில், இது என்னுடைய கடமை, ஒரு நர்ஸாக நான் என்னுடைய பணியை செய்து வருகிறேன்.என் குழந்தை வயிற்றில் வளர்கிறது, இருப்பினும் என்னுடைய பணியே எனக்கு முக்கியம், கடவுளின் அருளால் மக்களுக்கு சேவையாற்ற எனக்கொரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதை தான் செய்து வருகிறேன் என நெகிழ்கிறார்.கடந்தாண்டும் முதல் அலையின் போது இதே மருத்துவமனையில் Nancy Ayeza Mistry பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.