கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு மிக முக்கிய அவசர அறிவிப்பு..இரு முனையங்களுக்கு பூட்டு!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை மற்றும் செல்கை முனையங்கள் மூடப்பட்டுள்ளன.இன்று (25) முதல் மீள அறிவிக்கும் வரை குறித்த பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

இலங்கையில் புத்தாண்டுக்குப்பின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் செல்கை முனையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.