சற்று முன்னர் கிடைத்த செய்தி..வடக்கில் மேலும் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 408 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதில், யாழ்ப்பாணத்தில் ஏழு பேருக்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்கள் இருவருக்குக் தொற்று உறுதியாகியுள்ளது.அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.மேலும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.