ஒலிம்பிக் போட்டிகளை ஒரேயடியாக ரத்துச் செய்யத் திட்டம்..?

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் சூழல் ஏற்படவில்லை என்றால், ரத்து செய்யப்படும் என அதன் தலைவர் யோஷிரோ மோரி (Yoshiro Mori ) தெரிவித்திருக்கிறார்.
ஜூலை மாதம் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கமும், ஜப்பான் அரசும் கடந்த மாதம் அறிவித்தன. இந்த நிலையில், ஜப்பானின் விளையாட்டு நாளிதழான நிக்கான் ஸ்போர்ட்சுக்கு (Nikkan Sports) யோஷிரோ மோரி அளித்த பேட்டியில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் என்று மறைமுகமாக கூறினார்.