இலங்கையில் மிகத் தீவிரம் பெறும் கொரோனா..பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் விரைவில் முக்கிய தீர்மானம்..!!

தற்போதைய கோவிட் பரவல் நிலைக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முடிவை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்

நீண்ட வார இறுதியில் கோவிட் வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒரு முடிவு எட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.