தீவிரம் பெறும் கொரோனா..இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் கிராமம்..!!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள கிராமசேவகர் பிரிவு ஒன்று இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

அதிகரிகொட வாசம என்ற பகுதியே இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.