தனது சாதுரியமான திட்டத்தினால் திருடனுக்கே டிமிக்கி கொடுத்து திருட்டுப் போன மோட்டார் பைக்கை மீட்ட இளைஞர்..!!

சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி, பாலாஜி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் அஜீத்குமார். இவர், பாடியில் உள்ள பிரபல தனியார் கம்பெனி ஊழியர் ஆவார். இவர், கடந்த 19ம் திகதி வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் வந்துள்ளார்.பின்னர், அவர் வீட்டு முன்பு பைக்கை நிறுத்தி விட்டுத் தூங்கச் சென்றார்.

மீண்டும் மறுநாள் காலை அஜீத்குமார் தனது பைக்கை எடுக்க வந்தபோது, அங்கிருந்து பைக் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ் கருவி மூலம் ஆய்வு செய்தார். அப்போது அவரது பைக் செங்குன்றம் அருகே எடப்பாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.உடனே தாமதிக்காமல் அஜீத்குமார் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர், போலீசார் அஜீத்குமார் அழைத்துக் கொண்டு எடப்பாளையம் சென்றனர். அப்போது, அங்கு ஒரு வீட்டு முன்பு பைக் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.மேலும், போலீசார் பைக்கை திருடிய இரண்டு வாலிபர்களைப் பிடித்து கொரட்டூர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.போலீசாரின் துணையுடன் இளைஞர் சாமர்த்தியமாகத் தனது பைக்கை மீட்டுள்ளார்.D