போதைக்கு பணம் கொடுக்க மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த கொடூரன்!! யாழில் இன்று நடந்த பயங்கரம்..!!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இன்று முதியவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கான அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.போதைக்கு அடிமையான மகனே,தந்தையை அடித்துக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதியில் இன்று காலை 8 மணியளவில் நடந்த சம்பவத்தில், 53 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டார்.போதைக்கு அடிமையாள மகன், தினம் தினம் பணம் கேட்டு தந்தையை துன்புறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை தந்தை- மகனிடையே முரண்பாடு ஏற்பட்ட போது, குடும்ப உறுப்பினர்கள் பலர் அவரை தாக்கியதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.