வடக்கில் முதலாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விரைவில் இரண்டாவது தடுப்பூசி..!!

வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது கொரோனா நிலைமையானது தீவிரமடைந்து இருந்தாலும் வடக்கினை பொருத்தவரைக்கும் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனினும், அதனைத் தொடர்ந்து பேணுவதற்கு முப்படையினர்,சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களின் ஒன்று கூடல்களை தடுப்பதோடு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றுவரும் மாவட்ட. கொரோனா செயலணி கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.