சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் டோக்கியோவில் அவசரகால நிலை பிரகடனம்..!!

டோக்கியோவிற்கும் மேலும் மூன்றாவது மாகாணங்களுக்கும் ஜப்பான் 3 ஆவது கொரோனா அவசர காலநிலையை அறிவித்துள்ளது.

அதன்படி டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ ஆகியவற்றுக்கு ஏப்ரல் 25 முதல் மே 11 வரை கொரோனா அவசர காலநிலையை அறிவிப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா சற்று முன்னர் கூறியுள்ளார்.ஏற்கனவே ஒத்திவைப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்குற்கு இன்னும் மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வெள்ளிக்கிழமை வரை 9,805 இறப்புகள் உட்பட 550,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்கள் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் திட்டமிட்டபடி முன்னேறும் என்று அரசாங்கமும் ஒலிம்பிக் அமைப்பாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.எனினும், டோக்கியோவின் அண்மைய நிலைமைகள் டோக்கியோ ஒலிம்பிக் குறித்த கவலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.