இலங்கையில் ஒரே நாளில் இன்று 796 பேருக்கு கொரோனா!! ஒரு லட்சத்தை நெருங்கும் மொத்தப் பாதிப்பு!!

நாட்டில் மேலும் 796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளதுடன் இதுவரை 99 ஆயிரத்து 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 94 ஆயிரத்து 36 பேர் மீண்டுள்ளதுடன், நாட்டில் கொரோனாவால் மரணித்தோரின் எண்ணிக்கை 634ஆகப் பதிவாகியுள்ளது.இந்நிலையில்,இன்னும் நான்காயிரத்து 848 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.