சற்று முன்னர் கிடைத்த விசேட செய்தி..யாழில் 24 மணி நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 12 பேருக்கு கொரோனா..!!

யாழ் மாவட்டத்தில் மேலும் 12 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்வடமாகாணத்தில் இன்று 636 பேரின் பிசிஆர் மாதிரிகள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சோதனையிடப்பட்டன.இதில், 12 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பேர், போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், யாழ் சிறைச்சாலையில் ஒருவர், தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.அத்துடன், கைதடி அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.