கொரோனா பரவல் குறித்து இலங்கை வாழ் இளைஞர் யுவதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!!

இலங்கையில் வேகமாக பரவும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்கள் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதனை தவிர்ப்பது கட்டாயம் என IDH வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.இது வைரஸிடம் இருந்து பாதுகாப்பு பெற கூடிய ஒரு நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இளைஞர்களுக்கே இம்முறை கொரோனா அதிக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இளைஞர்கள் அதிகமாக வெளியே பயணிப்பதனால் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.நாட்டு மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான நடவடிக்கைகளை பின்பற்றி செயற்படவில்லை என்றால் வெளிநாடுகளை போன்று பாதிப்பு நிலை ஏற்படும். சமகாலத்தில் வெளிநாடுகளில் வைத்தியசாலை கட்டமைப்புகள் தொற்றாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாக குறிப்பிட்டார்.இந்த கொரோனா தொற்று வேகமாக பரவினால், ஆபத்துக்கள் அதிகமாகிவிடும். இளைஞர் யுவதிகள் இம்முறை மிகவும் அவதானமாக செயற்படவில்லை என்றால் பாரிய ஆபத்து ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.