வேகமாக தீவிரம் பெறும் கொரோனா..நாடு உடனடியாக முடக்கப்படுமா.? இராணுவத் தளபதியின் பதில்..

தற்போது, நாட்டினை முடக்கும் தீர்மானமில்லை, போக்குவரத்து கட்டுப்பாடும் இல்லை,ஆனால் தேவைப்பட்டால் கோவிட் தொற்று அதிகம் ஏற்படும் இடங்களை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


தற்போது நடைபெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும்.கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம்.முகக்கவசங்கள் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள். சமூக இடைவெளி அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.