கொரோனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து..14 பேர் பரிதாபமாக மரணம்!! மேலும் பலரின் கதி..??

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மும்பைக்கு அருகில், விரார் நகரிலுள்ள விஜய் வல்லாப் என்ற தனியார் வைத்தியசாலையிலேயே இந்தத் தீ விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.குறித்த வைத்தியசாலையின் இரண்டாவது மாடியில் உள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தீ பரவியபோது, சிகிச்சையில் இருந்த நோயாளிகள் எழுந்து ஓடமுடியாத நிலையில் தீயில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர். அங்கிருந்த மூவர் மட்டும் தப்பித்துள்ளனர்.

இதேவேளை, தீவிர சிகிச்சை விடுதிக்கு அருகிலுள்ள விடுதிகளில் இருந்த கொரோனா நோயாளிகள் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் மருத்துவமனையொன்றில் கொரோனாவுக்கு சிகிச்சையளிகும் விடுதியில் ஒக்சிசன் கசிவு ஏற்பட்டு 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொது இன்னுமொரு அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.