தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் மார்க்க சொற்பொழிவுகளில் கலந்து கொண்ட மாமாவும் பொலிஸாரால் திடீர்க் கைத!!

உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய – கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்திய சொற்பொழிவுகளில் கலந்து கொண்டதற்காக 40, 52 மற்றும் 55 வயதுடைய நபர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.