கடந்த 24 மணி நேரத்தில் யாழில் 16 பேருக்கு தொற்று உறுதி!

யாழில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கும், கோப்பாய் பகுதியில் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் சாவகச்சோி – கைதடியில் தொற்றுக்குள்ளான ஒருவர் அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக கடமையாற்றுபவர் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் யாழ்.மாநகரில் தொற்றுக்குள்ளான 4 பேரும் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.