தற்போது கிடைத்த விசேட செய்தி..இலங்கையில் மேலும் ஐந்து பேர் கொரோனாவினால் மரணம்..!! இன்று மட்டும் 657 பேருக்குத் தொற்று.!!

இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து இலங்கைக்குள் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 634 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் 80 வயதுடைய ஆண் ஒருவர், கண்டியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர், பேலிகொடையை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர், கம்பஹாவைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் மற்றும் மாரவில கொட்டமுல்லையைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.இதேவேளை இன்று மாத்திரம் நாட்டில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 657 ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.