உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனா!! இழுத்து மூடப்பட்ட அரச வங்கி..!! மேலும் 21 பேர் சுய தனிமைப்படுத்தலில்..!!

புத்தலையில் அரச வங்கி உத்தியோகத்தர் ஒருவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியமை, பி.சி.ஆர். பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,குறித்த வங்கியின் 21 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன்,அவ் அரச வங்கியும் இரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.அத்துடன் தியத்தலாவையில் மேற்கொள்ளப்பட்ட ‘என்டிஜன்’ பரிசோதனையின் போது, ஐவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.இவர்கள் அறுவரும் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புத்தலை மற்றும் தியத்தலாவை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.