தந்தை செலுத்திய முச்சக்கர வண்டியின் சில்லுக்குள் சிக்கிய ஒன்றரை வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!!

தந்தையொருவர் செலுத்திய முச்சக்கரவண்டியில் சிக்குண்ட ஒன்றரை வயது நிரம்பிய ஆண்குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பிபிலைப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

பிபிலைப் பகுதியின் நன்னபுராவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.எம். சேனுல சேகான் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.குறித்த குழந்தையின் தந்தை செலுத்திய முச்சக்கரவண்டி சில்லில், மேற்படி குழந்தை சிக்குண்டதையடுத்து, உடனடியாக அக்குழந்தை பிபிலை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள், அக்குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மெதகமை பொலிசார், முச்சக்கரவண்டியை செலுத்திய குறித்த குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.