பிரமாண்டமான சிறைப்பகுதியில் வித்தியாசமான உடையுடன் சுற்றித் திரிந்த பூனையை கைது செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பனாமா நாட்டின் கரீபியன் மாகாணத்தின் கோலன் நகரில் உள்ள பிரமாண்ட சிறைப்பகுதியில், விநோதமான உடையுடன் திரிந்த பூனையை, சிறை அதிகாரிகள் சோதனை செய்தபோது,அதன் உடலில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த போதை மருந்து பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது .

அதன் உடலில் இருந்த போதை மருந்துகளை அகற்றிய பின்னர், அப்பூனையை, பிராணிகள் வளர்ப்பு அமைப்பிடம் வழங்கிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.விலங்குகள் மூலம் போதை பொருட்களை கடத்தும் நிகழ்வு, இங்கு ஒன்றும் புதிதான ஒன்று அல்ல என்றும், ஆனால், இது வழக்கமான நடைமுறை இல்லை என்று சிறை அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.