இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா..திடீரென முடக்கப்பட்ட பிரதேசங்கள்..!!

கோவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக குருணாகல் மாவட்டத்தில் மேலும் ஐந்து பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.


இதன்படி, குளியாப்பிட்டிய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிகளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததை அடுத்து இவ்வாறு அந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.இதேவேளை, நேற்றையதினம் குருநாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேகவர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.