எங்கும் பிணக்குவியல்கள்..ஒரே நாளில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் உலகில் எந்த ஒரு நாடும் பாதிக்காத அளவு, கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.இரண்டு அல்ல 3 முறை உருமாறிய மிகவும் வீரியம் மிக்க கடுமையான கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது.

இன்றுவரை கூட சில கிராமங்களில்,இந்த கடுமையான கொரோனா பற்றி அறியாத மக்களும் அதிகாரிகளும் உள்ளார்கள் என்பது மிகவும் வேதனையான விடயம். இது குறித்து பிரித்தானிய விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு ஏற்கனவே கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இன்று நிலமை கட்டுக்கு அடங்காமல் செல்வதோடு. ஒரு நாளைக்கு 3 லட்சத்தி 14,000 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்ற ஆரம்பித்துள்ளது.இது இந்தியாவை பெரும் அழிவின் விழிம்பில் கொண்டு போய் விட ஆரம்பித்துள்ளது. இதனால், இந்திய வர்த்தகம், பங்குச் சந்தை, அனைத்துமே பாரிய சரிவை சந்திக்க நேரிடும். அது போக பல ஏழை மக்கள் இறந்த வண்ணம் உள்ளார்கள். இந்தியா தற்போது கூறும் இறப்பு எண்ணிக்கை பொய்யானது என்றும், அதனை விட, 10 மடங்கு அதிகமாக இருக்க கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடும் அளவு நிலமை உள்ளது.