பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம்.!! கல்வி அமைச்சின் அவசர அறிவிப்பு..!!

பல்கலைக்கழகங்கள் அனைத்தும் எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் இரு வாரங்களுக்கு பல்கலைக்கழங்களை மீளத் திறப்பதை ஒத்தி வைத்துள்ளதாகவும், கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.நாட்டில் கடந்த இரு மாதங்களின் பின்னர் மீண்டும் கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.