இலங்கையில் தீவிரம் பெறும் கொரோனா..ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலில்..!!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மீண்டும் தனிமைப்படுத்தல் உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் ஒரு பகுதியொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, குருணாகல் மாவட்டத்தின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.