தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை…யாழ் நகரில் இன்று இறுக்கமாகக் கண்காணிப்பு!!

ஊரடங்கு உத்தரவு தளர்வின் போது அரசாங்கம் அறிவித்துள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்க நடைமுறை யாழ் நகரில் இன்று முதல் இறுக்கமாக கண்காணிப்ப்பட்டு வருகின்றது. யாழ் நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் அறிவித்துள்ள நடைமுறையின் படி இன்று வியாழக்கிழமை இறுதி இலங்கங்களான 7 மற்றும் 8 உடையவர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.இறுதி இலக்கம் தவிர்ந்த ஏனையோர் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு அறிவுரை கூறப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.